காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக் கோதையாற் பிணித்துக் கொண்டகம் புக்கன்று. (இ - ள்.) அன்புமிகக் கொழுநனைக் கண்டு மாலையாற் கட்டி அகத்திலே கொண்டுபுக்கது எ-று. (வ - று.) கண்டு களித்துக் கயலுண்க ணீர்மல்கக் கொண்டகம் புக்கள் கொடியன்னாள் - வண்டினம் காலையாழ் செய்யுங் கருவரை நாடனை 1மாலையான் மார்பம் பிணித்து. (இ - ள்.) தலைவனைக் கண்டு மகிழ்ந்து கயல்போன்ற மையுண்ட கண் நீர்மிக அகத்திலே கொண்டுபுக்காள், வல்லியனையாள்; சுரும்பினங்கள் காலைப்பொழுதிலே யாழ்போல இசைக்கும் கரிய மலைநாடனைத் தாராலே அகலத்தைக் கட்டிக்கொண்டு எ-று. பிணித்துக் கொண்டு அகம்புக்காள் கொடியன்னாளென்க. (13)
1. சீவக. 1988. |