நள்ளிருண் மாலை நடுங்கஞர் நலிய ஒள்வளைத் தோளி யூடலு ணெகிழ்ந்தன்று. (இ - ள்.) செறிந்த இருளையுடைய மாலைக்காலத்துத் துளங்கா நின்ற துயரம் நெருக்க ஒள்ளிய தொடியாற் சிறந்த தோளினையுடையாள் 1வழக்காட்டிடத்துக் குழைந்தது எ-று. (வ - று.) தெரிவின்றி யூடத் தெரிந்துநங் கேள்வர் பிரிவின்றி நல்கினும் பேணாய் - திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி தூங்கிருண் 2மான்மாலை நெஞ்சே யுடையை நிறை. (இ - ள்.) குற்றமொன்றும் ஆராயாது நாம் ஊட, விசாரித்து நம் கொழுநர் நீங்குதலின்றியே தலையளி பண்ணினும் விரும்பாயாய் வேறு பாடின்றி உறங்கேமெனச் சொல்லாநின்றாய்; தங்கும் இருளையுடைய மயக்கத்தைச் செய்யும் மாலைக்காலத்து மனமே, நிறையுடையை நீ எ-று. (15)
1. பு. வெ. 236, 239, உரை. 2. பு. வெ. 308, 310. |