கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு 1பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கின்று. (இ - ள்.) குவடு நீண்ட மலையினையுடையவன் குவித்த கையுடனே பாடகம் அணிந்த சிற்றடியிலே வணங்கியபின்பு நெஞ்சு நெகிழ்ந்தது எ-று. (வ - று.) அணிவரு பூஞ்சிலம் பார்க்கு மடிமேல் மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும் வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை நிற்கென்றி வாழியர் நீ. (இ - ள்.) அழகுமிகும் பொலிந்த சிலம்பு ஆரவாரிக்கும் அடிமேலே அழகிய வரைபோன்ற அகலத்தையுடையவன் கலங்கி வணங்கவும் வலிமையுற்ற மனமே , வணங்காயாய் சிறியகாலை ஊடல்தீராதே நிற்பனென்று சொல்லாநின்றாய்; வாழ்வாயாக நீ எ-று. வாழியரென்பது நகை. (17)
1. பு.வெ. 303. |