நிலவுவே னெடுந்தகை நீள்கழை யாற்றிடைச் செலவுமுன் வலித்துச் செலவழுங் கின்று. (இ - ள்.) நிலவுபோல ஒளிவிடும் வேலினையும் பெரிய மேம்பாட் டினையுமுடையவன் உயர்ந்த மூங்கில் இயைந்த வழியிடைப் போவானாக முன்னே நிச்சயித்துப் போக்கு ஒழிந்தது எ-று. (வ - று.) 1நடுங்கி நறுநுதலா ணன்னலம்பீர் பூப்ப ஒடுங்கி யுயங்க லொழியக் - கடுங்கணை 2வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச் செல்லே மொழிக செலவு. (இ - ள்.) நடுக்கமுற்று,மணங்கமழும் நுதலினையுடையாள் மிக்க அழகு பீர்க்கம்பூப்போலப் பசப்ப மெலிந்து வருந்துதல் தவிரக் கொடிய அம்பினையுடைய வில்லை ஏருழவாகவுடைய வேடர்தம் முழையையுடைய உயர்ந்த பெரிய மலையிடத்துப் போகாம்;நெஞ்சே,தவிர்வாயாக போக்கை எ-று. (1)
1. தொல்.அகத்.சூ.54,இளம். மேற்.; 2. பு.வெ.5,கொளு,குறள்,872. |