ஒன்றல்ல பலபாடி மன்றிடை மடலூர்ந்தன்று. (இ - ள்.) ஒன்றன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின்நடுவே மடன்மாவைச் செலுத்தியது எ-று. (வ - று.) இன்றிப் படரோ டியானுழப்ப வைங்கணையான் வென்றிப் பதாகை யெடுத்தானாம் - மன்றில் தனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக் குனிமடன்மாப் பண்ணிமேல் கொண்டு. (இ - ள்.) இற்றைநாள்,இந்த நினைவுடனே யான் பழக ஐந்தம்பினையுடைய காமன் வெற்றிக்கொடியை உயர்த்தானாம்;அம்பலத்திலே ஒப்பில்லாத மடப்பத்தினையுடைய மாமன்ன பார்வையாள்தன் மிக்க அழகைக் கொண்டாடி வளைந்த பனைமடலாலாகிய குதிரையைப் பண்ணி அதன்மேல் ஏறி எ-று. ஏறி இன்று இப்படரோடு யானுழப்ப ஐங்கணையான் வென்றிப் பதாகை எடுத்தானாகும். (2) |