ஊழி மாலை யுறுதுயர் நோக்கித் தோழி நீங்கா டூதிடை 1யாடின்று. (இ - ள்.) உகம்போன்ற மாலைக்காலத்துத் தலைவியுற்ற துன்பத்தைப் பார்த்துத் தோழி விட்டு நீங்காளாய்த் தலைவனிடத்தே தூதாகி நடந்தது எ-று. (வ - று.) வள்வாய்ந்து பண்ணுக திண்டேர் வடிக்கண்ணாள் ஒள்வாள்போன் மாலை யுயல்வேண்டும் - கள்வாய தாதொடு வண்டிமிருந் தாம வரைமார்ப தூதொடு வந்தேன் எ-று. (இ - ள்.) வாரை ஆராய்ந்து பண்ணுறுத்து, திண்ணியதேரினை; வடுப் பிளவன்ன வழியினையுடையாள் ஒள்ளியவாள்போலும் கொடிய மலைக்காலத்துப் பிழைத்தல் வேண்டும்; தேனை இடத்திலேயுடைய பூவுடனே சுரும்பு ஆர்க்கும் மாலையினையுடைய மலைபோலுமார்பனே, நின்னை வணங்கத் தூதாகி வந்தேன் எ - று. (3)
1. யாகின்று |