போதார் கூந்தற் பொலந்தொடி யரிவை காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று. (இ - ள்.) மலர் நிறைந்த குழலினையும் பொற்றொடியினையும் உடைய தலைவிதன் அன்பு கைகடப்பத் தோழி கண்டு தன்னுடைய ஒழுக்கம் தளர்ந்தது எ-று. (வ - று.) 1ஆம்ப னுடங்கு மணிவளையு மேகின கூம்பன் மறந்த கொழுங்கயற்கண் - காம்பின் எழில்வாய்ந்த தோளி யெவனாங்கொல் கானற் பொழிலெல்லா மீயும் புலம்பு. (இ - ள்.) ஆம்பற்றண்டை வளைத்திட்ட அழகிய வளையும் வீழ்ந்தன;துயில் இழந்தன,வளவிய கயல்போலும் விழிகள்;மூங்கிலினும் அழகு மருவின தோளினையுடையாள் என்னாங்கொல்லோ!கடற்கரைச் சோலை முழுதுந்தரும்,தனிமையை எ-று. ஆம்பற்றண்டுபோலும் திரண்ட வளையென்பாரும்,இதழ்போலும் வெள்வளையென்பாருமுளர். (5)
1. ஆம்பல்வளை: புறநா.63:12,பரி.11:101-2. |