போர்தாங்கிப் புள்விலங்கியோனைத் தார்வேந்தன் றலையளித்தன்று. (இ - ள்.) புள்ளைவிலக்கிப் பூசலைத்தாங்கினவனை மாலையினையுடைய மன்னன் தண்ணளி செய்தது எ-று. (வ - று.) பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா தணங்கஞர்செய் தாளெறித னோக்கி - வணங்காச் சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே தலையளித்தான் றண்ணடையுந் தந்து. (இ - ள்.) மாறுபடும் பூசலிடத்துக் காரியென்னும் புள் விலக்கவும் விலங்கானாய்ப் பகைவரை வருத்துந் துன்பத்தைச் செய்து வீரரைவெட்டுதலைப் பார்த்து வளையாத மலையினையொத்த தோளான் செற்றத்தினையுடைய வீரனுக்கு அற்றைநாளே வரிசைகொடுத்தான்,மருதநிலம் பலவுங் கொடுத்து எ - று. (12) |