வெள்வளை நெகிழவு மெம்முள் ளாத கள்வனைக் காணாதிவ் வூரெனக் கிளந்தன்று. (இ - ள்.) சங்கவளை சோரவும் எம்மை நினையாது வெள்வளையினைக் கொண்ட கள்வனைக் காணாது இப்பதியென்று சொல்லியது எ-று. (வ - று.) வானத் தியலு மதியகத்து வைகலும் கானத் தியலு முயல்காணும் - தானத்தின் ஒள்வளை யோடவு முள்ளான் மறைந்துறையும் கள்வனைக் காணாதிவ் வூர். (இ - ள்.) விண்ணில் நடக்கு நிறைமதியிடத்து நாடோறும் காட்டிலே திரியும் முயலைக் காணாநிற்கும்; கையிடத்து ஒள்ளிய வளைகழலவும் உணரானாகி ஒளித்து வாழுங் கள்வனைக் காணாது , இந்தப்பகுதி எ-று. இவையிரண்டும் கைகடந்த காமத்த; இக்கூற்று இவர்க்கே உரிய; அல்லன யாவர்க்கும் உரிய. (9) |