தேங்கமழ் சிலம்பன் றாரெமக் கெளிதெனப் பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று. (இ - ள்.) மணங்கமழும் மாலையையுடைய தலைவன் மாலை எமக்குப் பெறுதற்கு எளிதென்று சொல்லிப் பாங்காயினார் கேட்பப் பரத்தை மொழிந்தது எ-று. (வ - று.) பலவுரைத்துக் கூத்தாடிப் பல்வய லூரன் நிலவுரைக்கும் பூணவர் சேரிச் - செலவுரைத்து வெங்கட் களியால் விறலி விழாக்கொள்ளல் எங்கட் கவன்றா ரெளிது . (இ - ள்.) பலபொய்யும் சொல்லி நடித்துப் பல செய்யினையுடைய ஊரன் நிலவைக் காட்டும் முத்தணியினையுடைய பரத்தையர் சேரியிடத்துப் போக்கைச் சொல்லி வெவ்விய மதுவையுண்ட மகிழ்ச்சியாற் பாணிச்சி விழாவினைக் கொண்டாடாதேகொள்; எமக்கு அவனுடைய மாலை எளிது எ-று. ஆதலால் , விழாக்கொள்ளல். (12) |