34. வேத்தியன் மலிபு
தோள்வலிய வயவேந்தனை
வாள்வலிமறவர் சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) தோளால்வலிய மறமன்னனை வாளால்வலிய வீரர் மேம்பாட்டினைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற்
கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்- தங்கிச்
செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய்
உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்.

(இ - ள்.) உள்ளங்கை நெல்லிப்பழத்தினது தன்மையாதலால் தேன் மலருமாலையினையுடையான் கொற்றக்குடை நிழலின்கீழே அவதரித்துக் 2குற்றத்தினைக் கொடுக்கும் வாட்பூசலிலேபுக்குப் பகைவர் தம் வேலின் வாயிலிலே உயிரைக்கொடுக்குஞ் செல்வம், மிகவும் உறுதியுடைத்து எ - று.

வாழ்க்கை,நெல்லியதன்பயமாதலால் உறுதியுடைத்தென்க.

(13)

1. தொல். புறத். சூ. 5, இளம்; நன். சூ. 221, மயிலை. விரு. மேற்.
2. குரோதத்தினைக்