மற்றவர் சேரியின் மைந்த னுறைந்தமை இற்றென விறலி யெடுத்துரைத் தன்று. (இ - ள்.) பரத்தையர் சேரியிடத்துத் தலைவன் தங்கினபடி இத்தன்மைத்தெனப் பாணிச்சி எடுத்துச் சொல்லியது எ-று. (வ - று.) தண்டா ரணியவாந் தையலார் சேரியுள் வண்டார் வயலூரன் வைகினமை - உண்டால் அறியே னடியுறை யாயிழையாற் பெற்றேன் சிறியேன் பெரிய சிறப்பு . (இ - ள்.) குளிர்ந்த மாலையினையுடைய அழகை ஆசைப்படும் பரத்தையர் சேரியிடத்திலே சுரும்பு நிறைந்த கழனியையுடைய ஊரன் தங்கினமை நீ அருளினபடியால் உண்டு; யான் அறியேன்; அடி பொருந்தும் ஆபரணத்தினையுடையாளாலே பெற்றேன் , சிறிய யான் பெரிய நன்மையை எ-று. (16) |