(வ - று.) சீர்மிகு நல்லிசை பாடிச் செலவயர்தும் கார்முகி லன்னார் கடைநோக்கிப் - போர்மிகு மண்கொண்ட வேன்மற மன்னரே யாயினும் வெண்கொண்ட லன்னாரை விட்டு . (இ - ள்.) சீர்மிக்க நல்ல புகழைப் பாடிச் செல்ல விரும்புவேம், காலமழை யன்னார் வாய்தலைக் கருதி; பூசன்மிக்க பூமியெல்லாம் கைக்கொண்ட வேலினையுடைய மறவேந்தரேயாயினும் பெய்யாமுகிலனை யாரைவிட்டு எ-று. விட்டு, கார்முகிலன்னார் கடைநோக்கிச் செலவயர்தும். (1) |