345. மல்வென்றி

(வ - று.)
கண்டான் மலைந்தான் கதிர்வானங் காட்டியே
கொண்டான் பதாகை மறமல்லன் - வண்டார்க்கும்
மாலை துயலு மருவிய மாமலை
போலுந் திரடோள் புடைத்து .

(இ - ள்.) எதிரி மல்லனைக் கண்டான் , மாறுபட்டான் , ஒளியான் மிக்க ஆகாயத்திடத்தே அவனை எழ வீசிக் குறித்த தாயத்தைக் கொண்டான் , வெற்றிக்கொடியினையுடைய மறமல்லன்; வண்டொலிக்கும் மாலை அசையும் அருவியினையுடைய பெரிய மலையையொக்கும் திரண்ட தோளினைத் தட்டி எ-று.

புடைத்துக் கொண்டான் .

தட்டுகை - உடக்கரிக்கை.

(3)