347. ஏறுகொள் வென்றி

(வ - று.)
குடைவரை யேந்தியநங் கோவலனே கொண்டான்
அடையவிழ் பூங்கோதை யஞ்சல் - விடையரவம்
மன்றங் கறங்க மயங்கப் பறைபடுத்
தின்று நமர்விட்ட வேறு.

(இ - ள்.) மாலையாகிய குடையையேந்திய நம் ஆயனே கொண்டான் , இலை மலரும் பூமாலையினையுடையாய் , அஞ்சாதேகொள்; மிக்க ஆரவாரம் மன்றிடத்தே ஒலிப்பக் கண்டார் மயங்கப் பறையறைந்து இன்று நம் உறவுமுறையார் விட்ட ஏற்றை எ-று.

(5)