(வ - று.) பாய்ந்து மெறிந்தும் படிந்தும் பலகாலும் காய்ந்தும்வாய்க் கொண்டுங் 1கடுஞ்சேவல் - ஆய்ந்து 2நிறங்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப் புறங்கண்டுந் தான்வருமே போர்க்கு . (இ - ள்.) எழப்பாய்ந்தும் காலின் முள்ளை யிட்டிடித்தும் தாழ்ந்தும் பலகாலும் கோவித்தும் 3கூவியும் , கடிய சேவற்கோழி , ஆராய்ந்து கோழிகளின் நிறமறிந்து கோழிநூல்வல்லவர் சொல்லுக்குச் சொல் ஒப்பாகவிட்ட கோழியைப் புறங்கண்டும் தான் பின்பும் போர்க்கு வாரா நின்றது எ-று. புறங்கண்டும் போர்க்கு வரும் . சொல்லுக்குச் சொல் வெல்லும் , ஆமைக்கு ஆமை வெல்லும் , தெங்குக்கு தெங்கு வெல்லும் எனக் கோழிகளின் 4நிலமறிந்துவிடுதல் . வித்தகர் - கோழிநூல் வல்லவர் . (6)
1. கடுஞ்சொல்லாராய்ந்து. 2. நிறங்கொண்டு. 3. கூடியுங்கடிய சொற்கோழி. 4. திறமறிந்து. |