(வ - று.) அருகோடி நீங்கா தணைதலு மின்றித் திரிகோட்ட மாவிரியச் சீறிப் - பொருகளம் புக்கு மயங்கப் பொருது புறவாயை நக்குமா நல்ல தகர் . (இ - ள்.) சேர ஓடி மீளாதே மிகக்கிட்டுதலும் இன்றிப் புரிந்த கொம்பினையுடைய எதிர்த்த தகர்கெடக் கோபித்துப் போர்க்களத்தே புக்குக் கலங்கப் பொருது புறவாயினை நக்கும் , நல்ல தகர் எ-று. (7)
1. பட்டினப். 77, ந. |