350. யானை வென்றி

(வ - று.)
கஞ்சுகம் வாய்த்த கவளந்தன் - கைக்கொண்ட
குஞ்சரம் வென்ற கொலைவேழம் - துஞ்சா
துழலையும் பாய்ந்திறுத் தோடாது தான்றன்
நிழலையுந் தான்சுளிக்கு நின்று.

(இ - ள்.) அட்டிமதுரமிட்டுத் திரட்டின கவளத்தைத் தன்கையிலே கொண்ட யானையை வென்ற கொலைத்தொழிலையுடை வேழம் , உறங்காதே கணையத்தையும் பாய்ந்து முறித்து ஓடாதே தான் தன்னுடைய நிழலையும் வெகுண்டு நின்று துகைக்கும் எ-று.

உம்மை ; சிறப்பு.

(8)