354. பூவை வென்றி

(வ - று.)
புரிவொடு நாவினாற் பூவை புணர்த்துப்
பெரிய வரியவை பேசும் - தெரிவளை
வெள்ளெயிற்றுச் செவ்வாய் வரியுண்க ணாள்வளர்த்த
கிள்ளை கிளந்தவைகீண் டிட்டு .

(இ - ள்.) பிரியத்தோடு நாவினாலே பூவையானது வகுத்துப் பெரியவான சொல்லுதற்கரிய வார்த்தைகளைச் சொல்லும்; தெரிந்தவளையினையும் விளர்த்த எயிற்றினையும் சிவந்த வாயினையும் செவ்வரி கருவரியாற் சிறந்த மையுண்ட கண்ணினையு முடையாள் தான் வளர்த்தகிளி சொன்ன வார்த்தைகளைக் கிழித்துக் கீழ்ப்படுத்தி எ-று.

கீண்டிட்டுப் பேசும்.

(12)