(வ - று.) பாலை படுமலை பண்ணி யதன்கூட்டம் கோலஞ்செய் சீறியாழ் கொண்டபின்- வேலைச் சுவையெலாந் தோன்ற வெழீஇயினாள் சூழ்ந்த அவையெலா மாக்கி யணங்கு. (இ - ள்.) படுமலைப்பாலையும் அல்லாத பாலைகளையும் ஆக்கி அழகு செய்த சிறிய யாழைத் தன் கையிலே கொண்டபின்பு , முன்பு சொன்ன திரிபாலைத்திறமெல்லாம் அமுதச்சுவைதோன்ற வாசித்தாள், சுற்றிய அவையினுள்ளாரையெல்லாம் தன்வசத்தாராக்கி அணங்கு எ-று. அணங்கு எழீஇயினாள். (15) |