(வ - று.) 1கழகத் தியலுங் கவற்றி னிலையும் அழகத் திருநுதலா ளாய்ந்து - புழகத்து பாய வகையாற் பணிதம் பலவென்றாள் ஆய வகையு மறித்து. (இ - ள்.) சூதின் இயல்பையும் கவற்றினுடைய நிலையையும் பனிச்சையையுடைய திருநுதலினையுடையாள் ஆராய்ந்து புகழினையுடைய மனையிடத்து உபாயவகையால் சூதுபொர ஒட்டின பலவும் வென்றாள், ஆதாயத்தின் கூறுபாட்டையுமறிந்து எ-று. அறிந்து பல வென்றாள். புகழென்பதன்கண் ககரம் விகாரத்தாற்றெக்கது. (16)
1. தொல். புறத். சூ.16, இளம்.; சூ. 20, ந. மேற். |