1வாடாவஞ்சி தலைமலைந்து கூடார்மண் கொளல்குறித்தன்று. (இ - ள்.) தோலாத வஞ்சியைத் தலையிலே சூடிப் பகைவர் பூமியைக் கொள்கையைக் கருதியது எ-று. (வ - று.) செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர் 2வெங்கண் மகிழ்ந்து விழவமர- அங்குழைய வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் குஞ்சி மலைந்தானெங் கோ. (இ - ள்.) சிவந்தகண்ணினையுடைய இளமைப்பருவத்து ஆனேற்றையொப்ப மிகைத்தெழுந்து வில்லினையுடைய வீரர் வெவ்விய மதுவையருந்தி வில்விழாவை விரும்ப, அழகிய தளிரினையுடைய வஞ்சியைத் தன்னைப் பணியாதாரைப் பணிவிப்பான் வேண்டிச் சுரும்பு ஆரவாரிப்ப மயிரிலே சூடினான்,எம்முடைய வேந்து எ - று. வணங்காரை வணக்கிய வேந்து சூடினானென்க. (1)
1. மணி. :119-20. 2. புறநா. 129 : 2. |