360. பாடல்வென்றி

(வ - று.)
1வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ்
அந்நரம்பு மச்சுவையு மாந்த்து.

(இ - ள்.) வண்டு தங்கும் கூந்தலினையும் மாடுவகிர்போன்ற கண்ணினையுமுடையாள் பாடினாள்; வெண்டுறைப்பாட்டும் செந்துறைப்பாட்டும் வேறுபாடு தோன்ற, அறிவர் மனத்தாற் கண்டறியக் கின்னரத்தின் ஓசைபோல, இணை கிளை பகை நட்பு இனமென்னும் வகையின் ஐந்தாவதாகிய கிளைத்தொடர்ச்சியமைந்த தித்தித்த கோவையினையுடைய யாழிற் செய்யப்பட்ட அழகிய 2நரம்பும் மந்திர மத்திம தாரமும் ஆராய்ந்து எ-று.

ஆராய்ந்து பாடினாள்.

செந்துறையென்பது ஓசை குறித்

(18)

1. தொல். புறத். சூ. 16, இளம்; சூ. 20, ந. மேற்.
(பி.ம்.)2. 'நரம்பு மந்தரசமு மத்திமாதாரகமு மாராய்ந்து'.