40. கொற்றவை நிலை
நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
கூடாரைப் புறங்காணுங் கொற்றவைநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) நீண்ட தோளினையுடையவன் வெற்றி பெறுவானாகவெனச் சொல்லி நல்ல பொருள்களால் நிரம்பிய பாத்திரத்தை வெற்றியாகவெடுத்து அரசனுடைய பகைவரை முதுகுபுறங்காணும் துர்க்காதேவி நிலைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
அணங்குடை 1நோலை பொரிபுழுக்கல் பிண்டி
நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக்- கணம்புகலக்
2கையிரிய மண்டைக் கணமோடி காவலற்கு
மொய்யிழியத் தான்முந் துறும்.

(இ - ள்.) தெய்வத்திற்குரித்தான எட்கசிவும் நெற்பொரியும் அவரை துவரையும் தருப்பணமும் நிணமும் குடரும் உதிரமும் நிறைவித்துத் திரட்சி விரும்பக் கையிலே பாத்திரத்தையிருத்திய பூதகணங்களையுடைய துர்க்காதேவி வேந்தற்குப்பகை கெடத் தான் முன்னே எழுந்தருளும் எ - று.

(5)

1. சிலப். 5: 68-9. 2. கையிரீஇ மண்டை கண