42. 1கொற்ற வஞ்சி
வையகம் வணங்க வாளோச் சினனெனச்
செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று

(இ - ள்.) உலகத்துள்ளோர் தொழ வாளாலே வெட்டினானெனச் சொல்லிப் பண்ணின வீரக்கழலினையுடைய அரசனது 2நன்மையைப் பெருக்கச் சொல்லியது எ-று.

(வ - று.)
3அழலடைந்த மன்றத் 4தலந்தயரா நின்றார்
நிழலடைந்த நின்னையென் றேத்திக் -கழலடையச்
செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக்
செற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ.

(இ - ள்.) நெருப்புப் பொருந்திய பகைவர் நாட்டு அம்பலத்து நொந்து அழியாநின்றவர் நின்னை நிழலாகச் சேர்ந்தேமென்று புகழ்ந்து சீபாதத்தை வந்துசேரச் சினத்தைப் பாராட்டிக் கோபித்து வந்தார்பட்டுத் தம்பெயர் கெட வெற்றியைப் பெற்று வேலை வலமாக உயர்த்தான்,வேந்து எ - று.

(7)

1. சிலப்.25 :141. 2. தன்மை 3. நன்.சூ.440.மயிலை.மேற். 4. தரந்தயரா நின்றார்