மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல்வேலார் நிலையுரைத்தன்று. (இ - ள்.) மாற்சரியத்தினையுடைய மன்னனாலே சிறப்புப்பெற்ற வெற்றி மிக்க வேலினையுடையோர் நிலைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான் சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப் -போரார் நறவேய் கமிழ்தெரிய னண்ணா ரெறிந்த மறவே லிலைமுகந்த மார்பு. (இ - ள்.) இனமொத்த முத்தாரங்களையணிந்தன;பெரிய மேம்பாட்டினையும் பொருந்திய வீரக்கழலினையுமுடையான் பகைவர்தம் போரைப் பார்த்துக் கோபித்துக் கண்சிவப்பப் போர்வீரர் தேன்மேவிய நாறு மாலையினையுடைய சத்துருக்களெறிந்த மாற்சரியத்தான் மிக்க இலைத்தொழிலையுடைய வேலை ஏற்றுக்கொண்ட மார்புகள் எ-று. மறவேலிலைமுகந்த போரார் மார்பு நேராரம் பூண்டனவென்க; இனி நேராம் பூண்டபோரார் மார்பு மறவேலிலை முகந்தன வென்றலுமொன்று. (11)
1. சிலப்.25: 142; மாராயம்-அரசனாற் செய்யப்படுஞ் சிறப்பு. |