49. 1உழபுல வஞ்சி
நேராதார் வளநாட்டைக்
கூரெரி கொளீஇயன்று.

(இ - ள்.) பொருந்தாதாருடைய நல்ல தேசத்தை மிக்க நெருப்பைக் கொளுத்தியது எ-று.

(வ - று.)
2அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ
ஆடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார் நாட்
டோடெரியுள் வைகின வூர்.

(இ - ள்.) வேலையொத்த விழியைப்புதைத்துப் பயப்பட்டுக் கூப்பிட்டு மயிலையொத்த குலமகளிர் மன்றென்று பாராதேசெல்ல,குயில்பாட, ஆளுலாவச் சுரும்பு ஒலிக்கும் தலைமையினையுடைய பகைவர் தேசத்து ஊர்கள் பரந்தோடும் நெருப்பினுள்ளே அவதரித்தன எ-று.

(14)

1. எரிபரந்தெடுத்தல்.
2. கள.29.