5. செலவு
வில்லே ருழவர் வேற்றுப் 1புலமுனிக்
கல்லேர் கானங் கடந்துசென் றன்று .

(இ - ள்.) வில்லாகிய ஏரினையுடைய உழவர் மாற்றாரிடத்தைக் கருதிக் கற்பொருந்தின காட்டைக் கழிந்துபோனது எ-று.

(வ - று.)
2கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப்
பாற்றினம் பின்படர முன்படர்ந் - தேற்றினம்
நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய
குன்றங் கொடுவில் லவர் .

(இ - ள்.) கூற்றின் குழுவினை யொப்பார் வளைந்த வில்லை இடப்பக்கத்திற்கொண்டு கழுகும் பருந்தும் பின்னே தொடர்ந்துவரத் தமது வலியானே நெருங்கிப்போனார், வளைந்த வில்லாளர்தம் ஏறுபொருந்திய பசுநிரைநின்ற நிலையையுடைய உயர்ந்த மூங்கிலையுடைத்தான குன்றத்தை நினைந்து எ-று.

ஏகினார் கூற்றினத்தன்னாரெனக் கூட்டுக .

(5)

1. புலமுன்னிக் .
2. தொல். புறத். சூ. 3, இளம். மேற்.