53. இதுவுமது
கட்டூரது வகைகூறினும்
அத்துறைக் குரித்தாகும்.

(இ - ள்.) 1விட்டிற்கும் பாசறையினது கூறுபாட்டைச் சொல்லினும் முற்பட்ட குறுவஞ்சிக்கு உரிமையுடைத்து எ-று.

(வ - று.)
அவிழ்மலர்க் கோதைய ராட வொருபால்
இமிழ்முழவம் யாழோ டியம்பக்-கவிழ்மணிய
காய்கடா யானை யொருபாற் களித்ததிரும்
ஆய்கழலான் கட்டூ ரகத்து.

(இ - ள்.) மலர்ந்த பூவாற்சிறந்த மாலையினையுடைய மகளிர் கூத்தாட ஒரு பக்கத்திலே 2முழங்காநின்ற முழவம் யாழுடனே 3ஆரவாரிப்பப் பக்கத்திலே 4 கவிழ்ந்தமணியினையுடைய சீறுகின்ற மதத்தினையுடைய யானை ஒருபால் மகிழ்ந்து முழங்கும் ,மேலாக நல்லோர்தெரிந்த வீரக் கழலினையுடையான் விட்டிருந்த பாசறையிடத்து எ-று.

(18)

1. விட்டிருக்கும்: மதுரைக். 125-7, ந.
(பி.ம்.)2. முழங்குமத்தளம்.
3. இசைப்ப.
4. நான்ற.