பொருபடையுட் 1கற்சிறைபோன் றெருவன்றாங்கிய நிலையுரைத்தன்று. (இ - ள்.) போரினைச்செய்யும் சேனையிடத்து வெள்ளம் தள்ளாதபடி கல்லாற்கட்டின கரையேபோலப் பெரும்படையை 2ஒருவீரன் தடுத்த நிலையைச் சொல்லியது எ-று. (வ - று.) 3வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற வாடன் முதியாள் வயிற்றிடம் - கூடார் பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா இரும்புலி சேர்ந்த விடம் . (இ - ள்.) முத்தியினை அறிந்து எல்லாப் பற்றுமற்றோர்க்கும் அற்புதமாம் , இவ்விடத்துநின்ற பொலிவழிந்த தன்மையையுடைய கிழவிதன் மடியகம்; பகைவர் அளவிறந்த சேனை நெருக்கிவந்து மேலிடவும் நின்ற நிலையினின்று நீங்காத பெரிய புலியனையான் கிடந்த இடம் எ-று. ஆல் : அசை; ஒரு சொல்விழுக்காடாயினுமாம். (19)
1. தொல்.புறத்.சூ.8;மதுரைக்.725-6;புறநா.169:4-5. 2. ஒருவன் 3. புறநா. 86 : 4-5 . |