55. 1தழிஞ்சி
2அழிகுநர் 3புறக்கொடை யயில்வா ளோச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று .

(இ - ள்.) ஒருவீரன் தனக்குக் கெட்டோடுவார் 4முதுகுபுறத்துக் கூரிய வாளோச்சாத மிக்க மறப்பண்பை விரும்பிச்சொல்லியது எ-று.

(வ - று.)
கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்
தான்படை தீண்டாத் தறுகண்ணன் - 5வான்படர்தல்
கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல்
6எண்ணியபின் போக்குமோ வெஃகு .

(இ - ள்.) காட்டிலே தோற்றின நெருப்புப்போலப் பகைவர் தன்னை மீதுர்ந்துவந்தாலும் ஆயுதந்தொடாத மறவன்றான் , பகைவர் சுவர்க்கலோகத்தே போதலைக்கருதி எதிரினல்லது அவ்வெகுண்டோர் முதுகிடுதல் கருதிய பின்பு ஓக்குவனோ வாளினை ? எ-று.

(20)

1. குறள். 772-3, பரிமேல் . தழிச்சுதல் தழிஞ்சி யென்பர்; தொல். புறத். சூ. 8, ந.
2. குறள். 776, பரிமேல் .
3. அகநா. 4 : 5; புறநா. 8 : 7.
4. முதுகுப்புறத்து.
5. பு. வெ. 47.
6. எண்ணியபினோக்குமோ.