மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும் 1பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று . (இ - ள்.) நிறைமதிபோன்ற கொற்றக்குடையின்கீழே தாழ்வு சொல்லி வேந்தர்பலரும் மாற்சரியத்தைவிடவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மறத்தினையுடைய மன்னன் பாடிவீட்டிலே இருந்தது எ-று. (வ - று.) 2கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய்திறந்த பின்னும் - சுரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பகைமெலியப் பாசறையு ளான் (இ - ள்.) கரும்பினையும் காய்ந்த நெல்லினையும் முழங்கு நெருப்பினை உண்ணப்பண்ணுவித்துப் பெரிய நீர்நிலைகள் பலவும் உடைத்தபின்னும் வண்டின் கூட்டமிக்க குளிர்ந்த செங்கழுநீரின் தூய்தான பூவாற் செய்த மாலையினையுடையோன் சத்துருக்கள் பொலிவழிய விட்ட படை வீட்டிலே இருந்தான் எ-று. (21)
1. பதிற். 15 : 1. 2. நான்மணி. |