ஒன்னாதார் முனைகெடவிறுத்த 1வென்வேலாடவன் விறன்மிகுத்தன்று . (இ - ள்.) சத்துருக்கள் வேற்றுப்புலம் அழியவிட்ட வென்றி வேலினை யுடையவன் வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ-று. (வ - று.) 2மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல் இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங்கெரிபோல் வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற் செல்லப் பெருகுஞ் சினம் . (இ - ள்.) சிங்கம்போற்கோபித்து மாறுபட்டெதிர்ந்தார் நிலத்தின் மேல் வெளிதூரப் படையெடுத்துப் போய்விட்டபின்பும் அசைந்தெரியும் நெருப்புப்போலச் சயிக்க வளரும் சேனையினையுடைய அரசனுக்குப் பகைமன்னர்மேல் எடுத்துச்செல்ல மிகாநிற்கும் கோபம் எ-று. 3வென்றோர் விளக்கங் கூறியது. (24)
1. பு - வெ. 62; மணி. 21 : 5. 2. கலி. 2 : 3; புறநா. 71 : 1. 3. தொல். புறத். சூ. 8. |