பற்றார் தம்முனைப் படுமணி யாயத் தொற்றா ராய்ந்த வகையுரைத் தன்று (இ - ள்.) பகைவர் தம்முனையிடத்து ஒலிக்கும் மணியினையுடைய நிரையிடத்து ஒற்றினைத் தெரிந்த கூறுபாட்டினைச் சொல்லியது எ-று. (வ - று.) நிலையு நிரையு நிரைப்புறத்து நின்ற சிலையுஞ் செருமுனையுள் வைகி - இலைபுனைந்த கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து 1நள்ளிருட்கண் வந்தார் நமர் . (இ - ள்.) பசுநின்ற இடமும் பசுவினுடைய அளவும் பசுவினுடைய புறங்காத்துநின்ற விற்படையினளவும் போர்ப்புலத்தில் தங்கிப் பச்சிலையுடனே விரவித்தொடுத்த தேன்பொழியுமாலையினையும் வீரக்கழலினையு முடைய போரை விரும்பியோய், வேற்றுப்புறத்திலேபோய் ஆராய்ந்து நடுவிருளிடத்து நம் சுற்றத்தார் வந்தார் எ-று. (6)
(பி.ம்.)1. பெருங். 3. 24 : 136 - 7 . |