இறுத்தபி னழிபிரங்கல் மறுத்துரைப்பினு மத்துறையாகும் . (இ - ள்.) எடுத்துவிட்டபின்பு பகைவர் தேசத்துக் 1கேட்டிற்கு இரங்கலை அழித்துச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம். எ -று. (வ - று.) குரையழன் மண்டிய கோடுயர் மாடம் 2சுரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த - நிரைதிண்டேர்ப் பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப நல்லிசை கொண்டடையார் நாடு . (இ - ள்.) ஆரவாரமுடைய நெருப்புக் கொளுத்தின மலையையொப்ப ஓங்கின மாளிகையெல்லாம் பேய்ச்சுரையும் பேய்ப்பீர்க்கும் மேற்கொண்டன; ஒழுங்குபட்ட திண்ணிய தேரினையும் பலகீர்த்தியாற் சிறந்த வென்றியினையும் சேனையாகிய கடலையுமுடையான்போய் எடுத்துவிட , நல்ல புகழைச் சொல்லி இவனைக் கூடாதார் தேயம் எ-று. நாடு சுரையொடு பேய்ப்பீர்க்குஞ் சுமந்தவென்க . கொற்றவள்ளை இவ்வாறன்று . (25)
1. கேட்டையிரங்கலை 2. சுரையொடுபீரஞ் |