பரந்தெழுதரு படைத்தானை வரம்பிகவாமைச் சுரங்காத்தன்று . (இ - ள்.) கைவளர்ந்து நடவாநின்ற ஆயுதத்தையுடைய சேனை தங்களெல்லையிற் புகுதாதபடி அருமையுடைத்தான வழியிடத்தைக் காத்தது எ-று. (வ - று.) குலாவுஞ் சிலையார் குறும்புகொள வெஃகி உலாவு முழப்பொழிக வேந்தன் - கலாவும் இனவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல் புனவேய் நரலும் புழை. (இ - ள்.) ஏறிட்ட வில்லினையுடைய காஞ்சியார்தம் அரணினைக் கைக்கொள்ளவேண்டி இயங்கு முயற்சியை ஒழிவானாக எதிர்மன்னன்; தம்மிற் கலக்கும் இனத்தாலுயர்ந்த புலியையொத்த மாற்சரியத்தை விரும்புவோர் காக்குமிடம் புனத்தின் மூங்கில் ஆர்க்கும் நூழை எ-று. இகல் வெய்யோரெனப் பிறர்போற் கூறினார் . வஞ்சித்தழிஞ்சி இவ்வாறன்று . (3) |