67. வாள்செலவு
அருமுனையா னறைகூவினபின்
செருமுனைமேல் வாள்சென்றன்று .

(இ - ள்.) வெல்லுதற்கரிய போரையுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்தபின்பு பொருபடையிடத்து வாள்போனது எ-று.

(வ - று.)
உணங்கு புலவறா வொன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய
குந்த மலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்கென்றான் வாள் .

(இ - ள்.) உலரும் புலானாற்றம் ஒழியாத பகைவர் பாசறைக் கைநிலை செறிந்த பிணக்கத்தையுடைய கானத்திடத்து வெய்யபகையைப் பார்த்துப் பகைவரை வருத்திய வேலிட்டுப் பண்ணுதன்மிக்க குதிரையினையுடைய அரசன் சத்துருக்கள் பொர அடர்ந்தபின்பு வாளினைச் செல்கவென்று ஏவினான் எ-று.

(7)