மண்டமருண் மாறாமைந்திற் கொண்டான்றலையொடு கோல்வளை முடிந்தன்று . (இ - ள்.) உற்றபூசலின் ஓவாதவலியினையுடைய கைப்பிடித்தான் தலையுடனே திரண்ட வளையினையுடையாள் இறந்தது எ-று. (வ - று.) 1கொலையானாக் கூற்றங் கொடிதே கொழுநன் தலையானா டையலாள் கண்டே - முலையால் முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா ளாங்கே உயங்கினா ளோங்கிற் றுயிர். (இ - ள்.) கொலைத்தொழிலையமையாத கூற்றம் சாலக் கொடிதாயிருந்தது; கணவனது தலையை அமையாளாய்த் தையலானவள் பார்த்தே கொங்கையாலே தழுவினாள்; ஒளிசிறந்த வதனத்தையும் கூட்டினாள்; அவ்விடத்தே வருந்தினாள்; மேலே பறிந்தது உயிர் எ-று. ஆதலால் கூற்றம் கொடிதேயென்க . (13)
1. தொல். புறத். சூ. 19, இளம். மேற். கம்ப. முதற்போர். 236. |