இலைப்பொலிதா ரிகல்வேந்தன் மலைப்பொழிய 2மறங்கடைஇயன்று . (இ - ள்.) பச்சிலையாலே பொலிவுபெற்ற மாலையாற்சிறந்த வலியினையுடைய மன்னன் பகைவர் மாறுபாடு நீங்க மறத்தொழிலைச் செலுத்தியது எ-று. (வ - று.) கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப் பருந்தோ டெருவை படர - அருந்திறல் வேறாய மன்னர் வியப்பக் கடாயினான் மாறா மறவன் மறம் . (இ - ள்.) கறுத்த தலையையும் வெள்ளைநிணத்தையும் சிவந்த தசையையும் இழுத்துக்கொண்டு பருந்தும் கழுகுஞ்செல்ல அரியவெற்றியினையுடைய பகைவர் அதிசயிப்பச்செலுத்தினான் நீங்காத கொடுவினையாளன் மறத்தொழிலை எ-று. (14)
1. தொல். புறத். சூ. 19, இளம். மேற். 2. மறங்கடாயின்று |