மண்கெழு மறவன் மாறுநிலை நோனான் புண்கிழித்து முடியினு மத்துறை யாகும் . (இ - ள்.) 1ஒப்பனையாற்பொலிந்த மறத்தொழிலையுடைய வீரன் பகைவருடைய மாறுபாட்டுக்குப் பொறானாகிப் 2பகைவர்வேல்பட்ட தன் மார்பிற் புண்ணைப் பிளந்து மரிப்பினும் முற்பட்ட துறையேயாம் எ-று. (வ - று.) 3நகையம ராய நடுங்க நடுங்கான் தொகையம ரோட்டிய துப்பிற் - பகைவர்முன் நுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண் . (இ - ள்.) மகிழ்ச்சிமேவும் தன் கூட்டம் குலையக் குலையானாய்ச் செறிந்த போரைத் துரந்த வலியினையுடைய மாற்றார் தன்முன்னெல்லையைக்கொண்டு கோபித்தலைப் பொறானாகி வேலின்நுதியாலே வெகுண்டு அறுத்திட்டான் , புண்ணினை எ-று. (15)
1. பூமியிலே பொருந்திய. 2. வேலினாலே புண்கிழித்து முடியினும் அத்துறையேயாம். 3. சிறுபாண். 220. |