விரைபரி கடவி வில்லுடை மறவர் குரையழ னடப்பக் குறும்பெறிந் தன்று . (இ - ள்.) கடுகின செலவையுடைய பரியை முடுக்கி வில்லினையுடைய வீரர் முழங்கெரி பரப்ப அரணினை அழித்தது எ-று. (வ - று.) 2இகலே துணையா வெரிதவழச் சீறிப் புகலே யரிதென்னார் புக்குப் - பகலே தொலைவிலார் வீழத் தொடுகழ லார்ப்பக் கொலைவிலார் கொண்டார் குறும்பு . (இ - ள்.) மாறுபாடே துணையாக நெருப்பு நடப்பக் கோபித்துப் புகுதற்கரிய இடமென்றுபாராதே உள்புக்குப் பகற்பொழுதே ஒருவர்க்கும் தோலாதார் படக் கட்டும் வீரக்கழல் ஆரவாரஞ்செய்யக் கொலைத் தொழிலாற் சிறந்த வில்லினையுடையார் அரணினைக் கைக்கொண்டார் எ-று. (8)
1. ஊர்க்கொலை . 2. இகலே துணையா வெரிதவழச் சீறி : நன். சூ. 451, மயிலே. மேற். |