வியலிடமருள விண்படர்ந்தோன் இயல்பேத்தி யழிபிரங்கின்று . (இ - ள்.) அகன்ற பூமியினுள்ளார் மயங்க வீரசுவர்க்கத்தே சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது எ-று. (வ - று.) 2போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன் ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் - யார்க்கும் அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல் நிறந்திறந்த நீளிலை வேல் . (இ - ள்.) பூசலுக்குத் தெப்பமனையவன் , உயர்ந்தோர்க்குத் தாணு வொப்பானவன் , தன் பதிக்கும் பூமிக்கும் ஓருயிரை யனையவன் யாவர்க்கும் தருமந்தோன்றின வாயிலை யடைத்தது; தலைவன் மருமத்தை வெளிசெய்த நீண்ட இலைத்தொழிலாற் சிறந்தவேல். எ-று. (20)
1. தொல். புறத். சூ. 24; புறநா. 235. 2. தொல். வேற்றுமையியல் , சூ. 15, ந. மேற். |