83. இதுவுமது
மன்னுயிர் நீத்த வேலின் மனையோள்
இன்னுயிர் நீப்பினு மத்துறை யாகும்.

(இ - ள்.) தலைவன் உயிரினை நீக்கின அயிலாலே மனைக்கிழத்தி இனிய ஆவியை ஒழிப்பினும் முன்சொன்ன துறையேயாம் எ-று.

(வ - று.)
1கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை செய்யுள்
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன்
இம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் [ அவ்வேலே ] அடிகள்
கொம்பிற்கு மாயிற்றே கூற்று .

(இ - ள்.) ஆரவாரத்தான் மிக்க கடல்சூழ்ந்த நிலத்திற் கொடிதே காண் , ஒருமையுடைமை; வெய்தான அயில்வாயிலே பட்டான் வெற்றியை விரும்பினோன்; அந்த அயிலே பகழிபோல மிளிரும் பெரிய விழியை உடையவளான அவன் அன்பினையுடைய வஞ்சிக்கொம்பனையாளுக்கும் கூற்றாயிற்று எ-று.

(23)

1. தொல் . மொழி . சூ . 24 , ந.; புறத் . சூ . 19 , இளம் . மேற்; கவ்வை நீர் : நன் . சூ . 458 , மயிலை . மேற் .