85. முனைகடி முன்னிருப்பு
மன்னர் யாரையு மறங்காற்றி
முன்னிருந்த முனைகடிந்தன்று.

(இ - ள்.) வேந்தரெல்லாரையும் சினத்தைக் காலப் பண்ணி 1அவரை முன்னேயிருந்த பூசற்களரியினின்றும் போக்கியது எ-று.

(வ - று.)
கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்லக்
கொடிமலி கொல்களி றேவித் - 2துடிமகிழ
ஆர்த்திட் டமரு ளடையாரை யம்முனையிற்
பேர்த்திட்டான் பெய்கழலி னான் .

(இ - ள்.) மிகநாறும் மதுவினையுடைய மாற்றார் அரணத்தின் வாயிலிடந்தோறும் போக வெற்றிக்கொடியால் மிக்க யானைகளையேவித் துடி கொட்ட ஆரவாரித்துப் போருட் பகைவரைச் செருப்புலத்தினின்றும் போகத் துரந்தான் , இட்டவீரக்கழலினையுடையான் எ-று.

(25)

1. பகைவரை.
2. துடியுகள.