ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று. (இ - ள்.) ஏவறையையுடைய முடக்குக்களைத் தாங்கின நிலைமையினை யுடைய எயில்காக்கும் வீரர் மலைந்த பூவைப் புகழ்ந்தது எ-று. (வ - று.) ஆடரவம் பூண்டா னழலுணச் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச் - சூடினார் உச்சி மதி 1வழங்கு மோங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர். (இ - ள்.) ஆடும் பாம்பையணிந்தான் நெருப்பு நுகரக் கோபித்த திரிபுரத்தைக்காக்கும் அவுணர்திரளையொப்ப மலைந்தார் , மேலே திங்களூரும் உயர்ந்த புரிசையைக் காவல்செய்வான்வேண்டி நொச்சிப் பூவை , 2நுனையாற் சிறந்த வேலினையுடையவர் எ-று. வேலவர் நொச்சி சூடினாரென்க . (1)
1. தவழும். 2. நுனி. |