87. மறனுடைப் பாசி
மறப்படை மறவேந்தர்
துறக்கத்துச் செலவுரைத்தன்று.

(இ - ள்.) சினச்சேனையையுடைய சினமன்னர் வீரசுவர்க்கத்திடத் துப்போன போக்கைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும்
ஏயினா ரேய விகன்மறவர் - ஆயினார்
ஒன்றி யவரற வூர்ப்புலத்துத் தார்தாங்கி
வென்றி யமரர் விருந்து.

(இ - ள்.) அரணைச் சூழப் பரந்தார் படுமுறையாற் பலகாவலையும் ஏவினார்; ஏவின மாறுபாட்டையுடைய வீரர் ஆயினார் , எதிரதாகக் கிட்டினவர் கெட ஊரிடத்துத் தூசிப்படையைத் தடுத்து வெற்றியினை யுடைய தேவர்கட்கு விருந்து எ-று.

விருந்து ஆயினாரென்க .

(2)

1. தொல். புறத். சூ.11, இளம். மேற்.