அருமிளையொடு கிடங்கழியாமைச் செருமலைந்த சிறப்புரைத்தன்று. (இ - ள்.) பகைவராற் புகுதற்கரிய காவற்காட்டோடு அகழி சிதையாதபடி பூசல்செய்த மதிப்பினைச் சொல்லியது எ-று. (வ - று.) 1வளையும் வயிரு மொலிப்பவாள் வீசி இளையுங் கிடங்குஞ் சிதையத் - தளைபரிந்த நோனார் படையிரிய நொச்சி விறன்மறவர் ஆனா ரமர்விலக்கி யார்ப்பு. (இ - ள்.) சங்கும் கொம்யும் முழங்க வாளையோச்சிக் காவற்காடும் அகழுமழியக் காவற்பிணியை யறுத்த பகைவரான உழிஞையார் வேனைகெட நொச்சியிடத்து வெற்றிவீரர் ஆனார் , போரைவிலக்கி ஆரவாரிப்பு எ-று. ஆரவாரிப்பு ஆனாரென்க . (3)
1. பு.வெ.130 |