அயிற்படையி னரண்காக்கும் எயிற்படைஞ ரிகன்மிகுத்தன்று. (இ - ள்.) கூரிய ஆயுதத்தாலே குறும்பினைக் காக்கும் மதிலிடத்துப் போர்வீரர் மாறுபாட்டைச் சிறப்பித்தது எ-று. (வ - று.) மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின் உகத்தா முயங்கியக் கண்ணும் -அகத்தார் புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி மறத்திடை மானமேற் கொண்டு. (இ - ள்.) பெருங்கப்பரந்த சிவந்தசோரி பொருந்திணை அகலத்தினின்றும் வீழத் தாம் வருந்தியவிடத்தும் உள்ளுள்ளார் அரணிற்குப் புறம்பே போந்து கோறலை விரும்பினார்,கோபித்துச் சினத்தின்நடுவே அபிமானத்தைமேற்கொண்டு எ-று. (6) |