93. அழிபடை தாங்கல்
இழிபுடன் றிகல்பெருக
அழிபடை யரண்காத்தன்று.

(இ - ள்.) தம் படைத்தாழ்விற்குக் கோபித்து மாறுபாடு மிகக்கெட்ட சேனை எயிலைக் காத்தது எ-று.

(வ - று.)
பரிசை பலகடந்து பற்றா ரெதிர்ந்தார்
எரிசெ யிகலரணங் கொண்மார்- புரிசை
அகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி
மிகத்தடிந்தார் மேனின் றவர்.

(இ - ள்.) கிடுகுபடை பலவற்றையும் வென்று பகையான உழிஞையார் எதிர்ந்தாராக அழலினைப்பண்ணும் மாறுபாட்டுக்குறும்பினைக் கொள்வான் காலிடாதபடி காலிடாதபடி அழகிய ஒளியையுடைய வாளை ஓச்சிப் பிணம்பெருகத் துணிந்தார்,மதின்மேல் நின்ற வீரர் எ-று.

(8)