வெம்முரணான் மகள்வேண்ட அம்மதிலோன் மறுத்துரைத்தன்று. (இ - ள்.) வெய்தான பகையையுடையவன் மகளை வேண்ட அழகிய குறும்பினுள்ளோன் மறுத்துச் சொல்லியது எ-று. (வ - று.) ஒள்வாண் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட் கள்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால். (இ - ள்.) நொச்சியில் ஒள்ளிய வாள் 1வீரரைக் கோபித்தெழுந்து மேனாள் தேனொழுகும் நறுமாலையுடையவள் பொருட்டாகக்கொண்டு கொள்வான் வேண்டி இடையின் அழகைக் கருதி வந்தவருடைய இளைய வாரணத்தின் கொம்பு,இந்தக் கறுத்த கண்ணினையுடையாள் வெளுத்த கட்டிலின் கால் எ-று. "ஆயிரு திணையு மரசர்க் குரிய" என்பதனால் மகட்பாற்காஞ்சி அரசர்க்குரித்து; இது மறவர்க்குரித்து. (9)
1. வீரர் |